மறைந்த மூத்த இயக்குனர் கே.சங்கர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா நடித்த அடிமைப் பெண். இப்படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூர் அரண்மனையில் அந்த காலத்தில் நடைபெற்றது. எம்ஜிஆர். ஜெயலலிதா நடனமாடி நடித்த ’ஆயிரம் நிலவே வா..’ பாடல் இந்த அரண்மனையில்தான் படமாக்கபட்டது.
அதன்பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு பிங்க் சிட்டி எனப்படும் ஜெய்பூரில் உள்ள சிட்டி பேலஸ், ரம்பாக் பேலஸ் மற்றும் சமோட் பேலஸ் ஆகியவற்றில் விஜய் சேதுபதி, டாப்ஸி. ராதிகா சரத்குமார் நடிக்கும் படப்பிடிப்பு நடைபெற்றது, இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்பட வில்லை. புதுமுக இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன் இயக்குகிறார்.
கடந்த 20 நாட்களாக ஜெய்ப்பூரில் நடிகர் கள் மற்றும் குழுவினர் இதன் படப் பிடிப்பு நடத்தி வருகின்றனர். இப்படப் பிடிப்பிற்கு முன்னதாக நடிகர்கள் உட்பட குழுவினர் கோவிட் -19 சோதனை செய்துக் கொண்டனர். படப்பிடிப்புக்காக அரண் மனையில் உள்ள அனைத்து அறைகளை யும் வாடகைக்கு எடுத்துள்ளனர். நடிகர்கள் முதல் கடைசி குழு உறுப்பினர்கள் வரை அரண்மை வளாகத்திற்குள் தங்கியுள் ளனர். மூன்று அடுக்கு பாதுகாப்பு உள்ளது. பார்வையாளர்களுக்கு அனுமதி கிடை யாது.
அரண்மனை ஊழியர்களால் சாப்பாடு வழங்கப்படுகிறது. ஒரு சில நடிகர்களை தவிர, எந்தவொரு குழு உறுப்பினரும் 40 வயதுக்கு மேல் இல்லை. அரசாங்கத்தால் கட்டளையிடப்பட்ட அனைத்து கட்டு பாடுகளும் அவர்கள் பின்பற்றுகிறார்கள்.