சென்னை: மக்களுக்கு தேவையானதையே சட்டமாக்க வேண்டும், அவர்களை அடைக்க கூடாது என்று சிஏஏவை விமர்சித்து நடிகர் விஜய் அதிரடியாக பேசியிருக்கிறார்.
விஜய்யின் மாஸ்டர் படத்தை மாநகரம் எடுத்து ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது.
அதில் பேசிய விஜய் தனது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு கொண்டார். அவர் தொடர்ந்து பேசியதாவது: கடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு சில விஷயங்கள் நடந்தது. அதனால் இந்த முறை ரசிகர்கள் இல்லாமல் ஆடியோ வெளியீட்டு விழா நடந்து இருக்கிறது. எனக்கும் இது கொஞ்சம் வருத்தமாக உள்ளது.
அதனால் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வாழ்க்கை நதி போன்றது. நம்மை வணங்குவார்கள், வரவேற்பார்கள், கல்லும் எரிவார்கள். எது எப்படி இருந்தாலும் கடமையை செய்ய வேண்டும்.
மக்களுக்கு எது தேவையோ அதை தான் சட்டமாக்க வேண்டுமே தவிர, சட்டத்தை உருவாக்கிவிட்டு அதற்குள் மக்களை அடைக்கக் கூடாது. நம்மை பிடிக்காதவர்கள் கல் எறிவார்கள். அவர்களை சிரிப்பால் கொல்ல வேண்டும்
தந்தை மாதிரி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நினைத்து கொள்வேன். ரெய்டு இல்லாத அந்த அமைதியான வாழ்க்கை வேண்டும் என்று நினைப்பேன். உண்மையாக இருக்க வேண்டும் என்றால் சில நேரத்தில் ஊமையாகவும் இருக்க வேண்டும் என்று பேசினார்.