மாணவனைத் தற்கொலைக்குத் தூண்டிய நடிகரின் மரணம்..
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள சுபாஷ்நகரை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
பெண்ணின் உருவத்துடன் அவன் முகம் இருந்ததால் நண்பர்கள், அவனை ‘’ அலி’ என்று கிண்டல் செய்து வந்தனர்.
இதனால் அவன் மன உளைச்சலில் இருந்தான்.
இந்த நிலையில் இந்தி நடிகர் சுஷாந்த் சிங், அண்மையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அந்த மாணவனுக்குத் தற்கொலை எண்ணத்தைத் தூண்டியுள்ளது.
‘’ பிரபல நடிகரே தற்கொலை செய்து கொள்ளும் போது நான் ஏன் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது’’ என்று தனது தம்பியிடம் சொல்லியுள்ளான்.
சொன்ன மாதிரி தூக்கில் தொங்கிய மாணவன், தனது தந்தைக்கு எழுதியுள்ள கடிதத்தில்’’ நமது குடும்பத்தில் பெண் குழந்தை பிறந்தால் அது, நான் ,மறுபிறவி எடுத்து வந்ததாக நினைத்துக் கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளான்.
– பா.பாரதி