பெங்களூரு: போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரர் பெங்களுருவில் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாடு முழுவதும் போதை மருந்து பயன்படுத்துவதை தடுக்க மத்திய,மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், பெங்களுருவில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் மகனும், பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரருமான சித்தாந்த் கபூர் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக, ரகசிய தகவலின் பேரில், பெங்களூரு எம்ஜி சாலையில் உள்ள ஹோட்டலில் நடைபெற்ற பார்ட்டியில் போலீசார் சோதனை நடத்தி னர். அப்போது அதில் கலந்துகொண்ட 35 பேருக்கு போதைப்பொருள் உட்கொண்டதாக சந்தேகிக்கப்பட்டு, மாதிரிகளை சேகரித்து மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த மருத்துவ சோதனையில், 6 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. அதில், சித்தாந்த் கபூரும் ஒருவர் என்பது உறுதி யாகி உள்ளது. இதனைத்தொடர்ந்து, சித்தாந்த் கபூர் உள்பட போதைப்பொருள் பயன்படுத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான சித்தாந்த் கபூர் அல்சூர் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தி திரைப்பட நட்சத்திரம் சக்தி கபூரின் மகன், சித்தாந்த் கபூரும் 2020 ஆம் ஆண்டு வெளியான ‘பௌகால்’ என்ற வலைத் தொடரில் (WEB SERIES) சிந்து தேதா கதாபாத்திரத்தில் நடித்தவர். ‘ஷூட்அவுட் அட் வடலா’, ‘அக்லி, ‘ஹசீனா பார்க்கர்’, ‘செஹ்ரே’ போன்ற பல திரைப்படங் களிலும் நடித்துள்ளார். ‘பாகம் பாக்’, ‘சுப் சுப் கே’ போன்ற படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.