சினிவுலகில் தன்க்கென் ஒரு ஸ்டைலை பராமரிப்பவர் நடிகர் சத்யராஜ். இவரது மகள் திவ்யா சத்யராஜ் ஒரு பிரபலமான ஊட்டச் சத்து நிபுணர், அவர் சமீபத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட சிறுவிவ சாயிகளுக்கு அரசாங்கம் நேரடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று விவசாய துறை அமைச் சரிடம் கேட்டுக்கொண்டார். வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்ப வர்களின் ஆரோக் கியத்தை மேம்படுத்த “மகிழ்மதி” என்ற இயக்கத்தை ஆரம்பித் திருக்கிறார்.
மகிழ்மதி இயக்கம் சார்பாக அரசாங்கத்திற்கு ஒரு கோரிக்கை வைத்துள் ளார். அதில் கூறியிருப்பதாவது:
கொரோனா ஊரடங்கு காரணமாக பல கம்பெனிகள் பொருளாதாரரீதியாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த கம்பெனிகளில் வேலை செய்யும் தொழி லாளர்களுக்கு சம்பளம் தர முடிய வில்லை. பல தொழிலாளர்கள் வேலையி லிருந்து நீக்கப்பட்டிருக்கி றார்கள். வேலை வாய்ப்புகளும் குறைவாகவே உள்ளது.
தமிழகத்தில் வேலை வாய்ப்புகளில் 70 விழுக்காடு தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதும் ஒதுக்கப்படுவதும் நியாயம் கிடையாது. அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப் புகளில் 70 விழுக்காடு தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுக்க தமிழக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண் டும். இந்த கோரிக்கை விஷயமாக தொழி லாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் நிலோபர் கபில் அவர்களை விரைவில் சந்திப்போம்.”
இவ்வாறு திவ்யா சத்யராஜ் கூறி உள்ளார்.