சென்னை:
இஸ்லாமியர்களுக்கு இயல்பான குணம் இதுதான் என நடிகர் ராஜ்கிரண் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்த கொண்ட பின், செய்தியாளர்களை சந்தித்த சீமான், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர். அதாவது, “இங்கு இருக்கக் கூடிய கிறிஸ்தவர்களும் நமக்காக வாக்களிக்க போவது கிடையாது. நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் தான். அது சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகளாகிவிட்டது” என சீமான் காட்டமாக விமர்சித்திருந்தார். இதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ராஜ்கிரணின் ஃபேஸ்புக் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஷேர் செய்துள்ள பதிவில், இஸ்லாமியர்களுக்கு, எவ்வளவு அநீதிகள் இழைக்கப்பட்டாலும், எவ்வளவு வன்மத்தோடு அக்கிரமங்களுக்குட்படுத்தப்பட்டாலும், அவர்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, தங்களால் முடிந்த உதவிகளைபிற சமுதாயத்தினருக்கும் செய்து கொண்டு, அமைதியாக வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம், இயலாமையோ, கோழைத்தனமோ, அல்லது உயிருக்கு பயந்தோ அல்ல என தெரிவித்துள்ளார்.
இதற்கு மறைமுகமாக ராஜ்கிரண் பதிலடி கொடுத்துருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
[youtube-feed feed=1]