பிரபல இயக்குநர் அட்லீயிடம் பணியாற்றிய அஸ்வின் ராம் ‘அன்பறிவு’ என்ற படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகம் ஆகிறார்.

‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.

ஆதியின் தாத்தாவாக நெப்போலியனும், ஆதியின் அப்பாவாக சசிகுமாரும் நடிக்க உள்ளனர். ஆதி இசை அமைத்துள்ளார்.

மூன்று தலைமுறைகளை பற்றிய கிராமத்து கதையான இந்தப்படம் மதுரை பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கி விட்ட நெப்போலியன், இதில் நடிப்பதற்காக விரைவில் தமிழகம் வருகிறார்.

கேரளா மற்றும் பொள்ளாச்சி, கோவையில் இந்த படத்தின் ஷுட்டிங் இப்போது நடந்து வருகிறது.

இடைவிடாமல் படப்பிடிப்பை நடத்தி மார்ச் மாதம் , ஒட்டு மொத்த ஷுட்டிங்கையும் முடிக்க திட்டம்.

– பா. பாரதி