கொரோனா,.. நடிகர் மோகன்லால் .. மலைக்கவைக்கும் மனித நேயம்….
மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால், இப்போது சென்னையில் தங்கி இருக்கிறார்.
ஆனாலும் கேரளாவில் உள்ள கொரோனா நிலவரம் குறித்து தினமும் விசாரிக்கத் தவறுவது இல்லை.
கொரோனா நோயாளிகளுடன் நாளும் பொழுதைக் கழிக்கும், சுகாதார ஊழியர்கள் மற்றும் அலுவலர்களின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் அவர்களுடன் , மோகன்லால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாட திட்டமிடப்பட்டது.
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா, இதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.
நேற்று சென்னையில் இருந்து கேரளாவில் உள்ள கொரோனா மையங்களில் பணிபுரியும் 250 அலுவலர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுடன் மோகன்லால், வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசினார்.
அவர்களின் பணியைப் பாராட்டிய மோகன்லால், ‘’வரவிருக்கும் நாட்களில் உங்கள் பணி மிகவும் அத்தியாவசியமாக இருக்கும் ‘’ என்று குறிப்பிட்டார்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இந்த உரையாடல் நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற மலையாளப்பாடல் ஒன்றையும் , அப்போது பாடி அசத்தினார், மோகன்லால்.
மோகன்லாலுடன் உரையாடி மகிழ்ந்தவர்களில், கண்ணூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் என்..ராயும் ஒருவர்.
இவர், மோகன்லாலுடன், திருவனந்தபுரத்தில் உள்ள, அரசு மாடல் உயர்நிலைப்பள்ளியில் உடன் பயின்றவர்.
இதனைக் கல்லூரி முதல்வர் நினைவு கூர்ந்தபோது, மோகன்லால், வியப்பில் மூழ்கினார்.
– ஏழுமலை வெங்கடேசன்