பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத்துக்கு கொரோனா

Must read

மும்பை: பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத்துக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் தொற்று பரவல் உச்சம் பெற்றுள்ளது. தினசரி பாதிப்பு 4 லட்சத்தை கடந்துள்ள நிலையில், தினசரி  உயிரிழப்பும் 4 ஆயிரத்தை கடந்துள்ளது. அதிகரித்து வரும் நோயாகிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருந்துகள், படுக்கை வசதி, ஆக்சிஜன் கிடைப்பதில் பற்றாக்குறை நீடித்து வருகிறது.

இந்த  நிலையில்,  இந்தி நடிகை கங்கனா ரணாவத்துக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு, தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தி உள்ளார்.

More articles

Latest article