சென்னை

டிகர் டெல்லி கணேஷ் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக மரண்ம் அடைந்துள்ளார்.

முதலில் நாடக நடிகராக இருந்து தமிழ் திரையுலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் டெல்லி கணேஷ் கோலோச்சியுள்ளார். மேலும் டப்பிங் கலைஞராகவும் சிறந்து விளங்கி வந்தார்.இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.

கடந்த 1976 ஆம் வருடம் டெல்லி கணேஷ் திரைத்துறைக்கு வந்தார். படங்களில் நடிப்பதற்கு முன் 1964 முதல் 1974 வரை இந்திய விமானப்படையில் டெல்லி கணேஷ் பணியாற்றினார். இவர்நடித்து வெளியான முதல் திரைப்படம் பட்டினப்பிரவேசம் (1977), இவரை இயக்குனர் கே. பாலசந்தர் தான் அறிமுகம் செய்தார்.

பொதுவாக டெல்லி கணேஷ் நடித்த பெரும்பாலான கதாபாத்திரங்களில் துணை நடிகர் அல்லது நகைச்சுவை நடிகர் வேடங்களே இருந்தாலும் அபூர்வ சகோதரர்கள்போன்ற சில படங்களில் வில்லனாகவும் நடித்து கவனம் ஈர்த்தார். இவரது நடிப்பு சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், ஆஹா, தெனாலி, சங்கமம், அவ்வை சண்முகி, இந்தியன் 2 உள்பட 400-க்கும் மேற்பட்ட படங்களில் கவனத்தை ஈர்த்தது.

இதுவரை டெல்லி கணேஷ் 8 முக்கிய சின்னத்திரை தொடர்களில் நடித்து 1979ம் ஆண்டு பசி திரைப்படத்திற்கு “தமிழ்நாடு மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார். அதோடு, 1993 – 1994ம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநில அரசின் “கலைமாமணி விருது”ம் டெல்லி கணேஷ் பெற்றுள்ளார்.

இன்று அதிகலை வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் டெல்லி கணேஷ் சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது. மறைந்த டெல்லி கணேஷின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவர் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.