சென்னை:
டல்நலக்குறைவு காரணமாக நடிகர் டி ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

நடிகரும், இயக்குனருமான டி ராஜேந்தருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால்கடந்த 19ஆம் தேதி சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள தகவலில், டி ராஜேந்தருக்கு இருதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய், வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும், தற்போது, நல்ல முறையில் மருத்துவமனையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.