சென்னை, உடல்நலக் குறைவால், நகைச்சுவை நடிகர் ‘போண்டா’ மணி, 58, சென்னை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது இரு கிட்னியும் செயலிழந்துள்ள நிலையில், அவருக்கு உதவ சக நடிகரான பெஞ்சமின் கோரிக்கை வைத்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் ‘போண்டா’ மணி பல படங்களில் நடிகர் வடிவேலு, விவேக் உடன் நடித்தவர்.  பொல்லாதவன், அழகர் மலை, வின்னர் உள்பட ஏராளமான  படங்களில் நடித்து உள்ளார். இவர் கடந்த மே மாதம் சிறுநீரக பிரச்னை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு  சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் சிறுநீரம் செயலிழந்து வருவதாக கூறப்பட்டது. அதற்கு தேவையான மருந்து மாத்திரைகள் எடுத்து வந்தார்.

இந்த நிலையில், அவர் மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டு,  சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயிருக்கு போராடும் நடிகர் போண்டாமணிக்கு உதவ நடிகர் பெஞ்சமின் கோரிக்கை விடுத்து விடியோ வெளியிட்டுள்ளார். இதற்கிடையில், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ‘போண்டா’ மணிக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களிடம், நடிகர் சங்க துணைத் தலைவர் ‘பூச்சி’ முருகன் பேசினார். ‘போண்டா மணி நலமுடன் உள்ளார்; விரைவில் வீடு திரும்புவார்’ என, அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

வீடியோ உதவி: SUN News