டெல்லி
உச்சநீதிமன்றத்தின் 75 ஆம் ஆண்டு வ்ழாவுக்கு பிரபல நடிகர் அமீர் கான் வந்துள்ளார்.
இந்திய உச்சநீதிமன்றத்தின் 75வது ஆண்டு விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று அந்த நிகழ்ச்சிகளில் ஒன்றாக உச்சநீதிமன்றத்தில் லாபடா லேடீஸ் என்ற திரைப்படம் திரையிடப்பட உள்ளது. நிதான்ஷி கோயல், ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவா, பிரதிபா ரந்தா உள்பட பலர் நடித்துள்ள இப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியானது.
கிரண் ராவ் இயக்கத்தில், நடிகர் அமீர் கான் தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படம் பாலின சமத்துவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் இன்று மாலை சுப்ரீம் கோர்ட்டில் திரையிடப்பட உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள், அவர்களின் குடும்பத்தினர், பதிவுத்துறை அதிகாரிகளும் இப்படத்தை காண உள்ளனர்.
இன்று, லாபடா லேடீஸ் திரைப்படம் திரையிடப்பட உள்ள நிலையில் அப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான அமீர் கான் உச்சநீதிமன்றத்துக்கு வந்துள்ளார். நடிகர் அமீர் கானை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வரவேற்றுள்ளார்