சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையில், நேற்று இரவு ஆய்வு செய்த போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், அதிக வசூல் செய்த 5ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படடு உள்ளதாகவும், 24மணி நேரம் இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தீபாவளி சிறப்பு பேருந்துகளை ஆய்வு செய்தார். அப்போது பயணிகளிடம் பேருந்து வசதி உள்பட குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்திதார். அப்போது, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு 20,334 பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்டு வருவதாக தெரிவித்தவர், நேற்றைய முன்தினம், சென்னையில் இருந்து 2,100 தினசரிப் பேருந்துகளுடன் 338 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டது. அதன்மூலம் 89,932 பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்துள்ளனர்.
இன்று (நேற்று) இரவு 7 மணி நிலவரப்படி சென்னையிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளில், 1,88,107 பயணிகள் பயணம் செய்கின்றனர்.
நாளைய தினம் (இன்று) சென்னையிலிருந்து 2,100 தினசரி பேருந்துகளும் 1,540 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. இதில் பயணம் செய்திட 1,05,051 பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் 044-24749002, 18004256151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று கூறியவர், அதிக கட்டணம் வசூல் செய்ததாக 5 பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும்,
பொதுமக்கள் வசதிக்காக புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்திலிருந்து மாநகர் முழுவதும் 270 இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.