சென்னை: திடீர் நெஞ்சுவலி காரணமாக, பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டின் பொறுப்பு டிஜிபியாக இருந்து வருபவர் வெங்கட்ராமன். இவரை திமுக அரசு நியமனம் செய்ததில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக  புகார்கள் எழுந்தன. மேலும், சீனியாரிட்டியில் பிந்திய நிலையில் உள்ள வெங்கட்ராமன், ஆளும் தரப்புக்கு வேண்டியவர் என்பதால், அவரை டிஜிபியாக்க  தமிழ்நாடு அரசு முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவருக்கு பதில் வேறு சிலரின் பெயரி  டிஜிபியாக நியமிக்க மத்தியஅரசு  பரிந்துரை செய்தும்,  அதை ஏற்க தமிழ்நாடு அரசு மறுத்து வருகிறது. இதனால் அவர் வெங்கட்ராமன் கடுமையான மன அழுத்தத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், அமைச்சர் நேரு மீது ரூ.1020 கோடி ஊழல் புகார் பட்டியலை அனுப்பிய அமலாக்கத்துறை, உடனடியாக எஃப்ஐஆர் பதிவுசெய்து விசாரிக்க வேண்டும் என அறிவுறுத்தியது.  ஏற்கனவே முதலில் அரசு வேலைக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை  லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை டிஜிபிக்கு கடிதம் எழுதி, அதுகுறித்து விசாரிக்க அறிவுறுத்தியது. ஆனால், அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு குறித்து  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தமுடியாத நிலையில்,  டிஜிபி இருந்து வருகிறார்.

இதன் காரணமாக கடும் மனஅழுத்ததில் இருந்து வந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து,  அவர் கிண்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். கடுமையான மார்பு வலி இருப்பதாக புகார் அளித்ததை அடுத்து, தற்காலிக காவல்துறை இயக்குநர் ஜி வெங்கடராமன் செவ்வாய்க்கிழமை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு (KCSSH) விரைந்தார்.

ஆரம்ப மதிப்பீடுகள் சாத்தியமான இருதய நிகழ்வை பரிந்துரைத்தன, மருத்துவர்கள் அவரை மேலும் மதிப்பீட்டிற்கு அனுமதிக்க தூண்டினர். மருத்துவக் குழு தற்போது மூத்த அதிகாரியை நிலைப்படுத்தி முதற்கட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதால், ஆஞ்சியோகிராம் செயல்முறை இன்னும் செய்யப்படவில்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆஞ்சியோகிராம் செய்த பின்னரே அவரது சரியான நிலை தெரியவரும் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இதற்கிடையில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிலைமையை நேரில் ஆய்வு செய்ய கே.சி.எஸ்.எஸ்.எச்.க்கு நேரில் சென்றார். சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் அவர் பேசி, டி.ஜி.பியின் உடல்நிலை மற்றும் திட்டமிடப்பட்டுள்ள சிகிச்சை முறை குறித்து விசாரித்தார். டிஜிபியின் உடல்நிலை மற்றும் சிகிச்சையின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவரிக்கும் அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கை இன்று பிற்பகலில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

[youtube-feed feed=1]