டில்லி:
வாராக்கடன்களை வசூலிக்கும் வகையில், வங்கிளை ஏமாற்றுபவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
பெரும் தொழிலதிபர்கள் முதல் பாமர மக்கள் வரை வங்கிகளில் கடன் வாங்கிக்கொண்டு, அதை சரியாக கட்டாமல் டிமிக்கி கொடுத்து வருகின்றனர்.
வங்கிகளுக்கு பெரும் சுமையாக உள்ள இதுபோன்ற வாராக்கடன்களை வசூலிக்கும் வகையில், வங்கிகளை ஏமாற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த அவசர சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதன் சட்டத்தின்மூலம் கடன்களை வசூலிக்க ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பியது.
இந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன் மூலம் வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, வங்கிகளில் வாராக்கடனை வசூலிக்க புதிய நடைமுறைகள் செயல்படுத்தப்படும் என தெரிகிறது.