கொல்கத்தா:
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா பாண்டிதியா சாலையில் நேற்றிரவு நடந்து சென்ற பெண்கள் மீது காரில் சென்ற சிலர் ஆசிட் வீசினர். இதில் 20 வயதுடைய 5 பெண்கள், மற்றொருவருக்கு காயம் ஏற்பட்டது. இவர்களில் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் காரை விரட்டிச் சென்றனர்.
ஆனால் அந்த கும்பல் தப்பிச் சென்றது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். யாரையும் தனிப்பட்ட முறையில் குறிவைக்காமல், அனைவரையும் குறிவைத்து ஆசிட் வீசப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.