ஹீரோவான விஜய் வசந்த் பிக் பாக்கட் அடிப்பதை தொழிலாக செய்து வருகிறார். ஒருநாள் பஸ்ஸில் சிருஷ்டி டாங்கே சந்திக்கிறார். விஜய் வசந்தை போலீஸ் என நினைத்து பழகி வருகிறார். விஜய் வசந்துக்கு சிருஷ்டி டாங்கே மேல் காதல் ஏற்படுகிறது. இதற்கிடையில் சிருஷ்டி டாங்கே வேலை செய்யும் வேலைக்காரியின் மகள் தேர்வில் குறைவான மதிப்பெண் வாங்கி தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப் படுகிறார். அவரது மதிப்பெண்களை மறுகூட்டல் செய்ய விண்ணப்பிக்கிறார் சிருஷ்டி டாங்கே. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு கும்பல் கொலை செய்ய துரத்துகிறது.
அதே நேரத்தில் பர்ஸுக்காக விஜய் வசந்தை ஒரு கும்பல் துரத்துகிறது. போலீஸ் அதிகாரியான சமுத்திரக்கனி, தன் காதலியை கொலை செய்தவர்களை விசாரிக்க, அவரையும் ஒரு கும்பல் துரத்துகிறது.
இந்த மூவருக்கும் உள்ள ஆபத்துக்கு பின்னணியில் இருப்பது ஒரே கூட்டம் தான், அவர்கள் யார், சமுத்திரக்கனி அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தினாரா? விஜய் வசந்தின் காதல் கைகூடியதா? என்ற கேள்விகளுடன் கல்வி வியாபாரம் கூடாது எனும் மெஸேஜையும் சேர்த்து விறுவிறுப்பாக சொல்கிறது படத்தின் கதை.
விஜ்ய வசந்த் கெட்டப்பில் மாற்றம் கட்டியது போல் நடிப்பிலும் மாற்றம் தெரிகிரது. ஆக்ஷன் மற்றும் காமெடி காட்சிகளில் நன்றாக நடித்துள்ளார்.
நாயகி சிருஷ்டி டாங்கே பாடல் காட்சிக்கு மட்டும் இன்றி கதைக்கும் சிறிது தேவைப் பட்டிருக்கிறார். அதே அளவில் நடித்தும் இருக்கிறார்.
சமுத்திரகனி, எப்பவும்போல பஞ்ச் டயலாக் எல்லாம் சூப்பர், ஆக்ஷன் காட்சிகளிலும் நன்றாக நடித்துள்ளார். தனது பணியை சிறப்பாகவே செய்திருக்கிறார்.
பல படங்களில் அம்மாவாக நடித்து வந்த சரண்யா இந்தப் படத்தில் வில்லியாக நடித்துள்ளார். கல்வி நிறுவனங்கள் நடத்தும் மிகப்பெரிய தொழிலபதிராக இவரது நடிப்பு வெற்றிபெற்றுள்ளது.
இயக்குனர் ராஜபாண்டி கல்வித் துறை சீர்கெட்டு போனதற்கு யார் காரணம்?, அரசா?, தனியார் நிறுவனங்களா அல்லது மக்களா? என்ற விவாததைக் கொண்டுவந்து அதற்கான தீர்வை மக்களுக்கு புரியும்படி திரைக்கதை அமைத்து சொல்லி இருக்கிறார்.
மொத்தத்தில் அச்சமின்றி- கல்விக்கான புரட்சி