சென்னை: ஆவின் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம் பொருட்களின் விலை நாளை (மார்ச் 3ந்தேதி)  முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக அரசு பதவியேற்ற 33  மாத காலத்திற்குள்‌ பால்‌ மற்றும்‌ பால்‌ பொருட்களின்‌ விலைகளை 9வது  முறையாக  உயர்த்தி உள்ளது. ஏற்கனவே 8 முறை ஆவின் பொருட்கள் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போது 9வதுமுறையாக ஆவின் பொருட்கள் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி, மார்ச் 3ந்தேதி முதல் ஆவின் ஐஸ் கிரிம் விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசு சார்பில் மக்களுக்கு தேவையான பால் தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.  தமிழக மக்களின் அத்தியாவசிய பொருளாக ஆவின் பால் திகழ்ந்து வருகிறது.  அதுபோல ஆவின் பால் பொருட்களுக்கும் மக்களிடைய நல்ல வரவேற்பு உண்டு.    இந்த நிலையில், தமிழ்நாடு அரசு அவ்வப்போது ஆவின் பொருட்களின் விலைகளை உயர்த்தி மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

ஏற்கனவே ஆவின்பால் உள்பட ஆவின் பொருட்களின் விலை 8 முறை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போது 9வது முறையாக மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளது. தற்போது, வெயில் காலம் தொடங்குவதால்,  ஐஸ்கிரிம் விலையை உயர்த்துவதாக அறிவித்து உள்ளது.  இந்த விலை  உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.  இது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி,  ஆவின் ஐஸ்கிரீம் ரூபாய் 2 முதல் ரூபாய் 5 வரை அதிகரிக்கிறது.

ஆவின் சாகோபர் விலை 65 மில்லி 20 ரூபாயில் இருந்து 25 ரூபாயாக அதிகரிக்கிறது.

பால் – வெண்ணிலா 125 மில்லி ரூபாய் 28-ல் இருந்து ரூபாய் 30 ஆக விற்கப்பட உள்ளது.

கிளாசிக் கோன் – வெண்ணிலா 100 மில்லி ரூபாய் 30ல் இருந்து ரூபாய் 35 ஆக அதிகரிக்கப்படுகிறது.

கிளாசிக் கோன் 100 மில்லி ரூபாய் 30ல் இருந்து ரூபாய் 35 ஆக அதிகரிக்கிறது.

ஏழை, எளிய  மக்களின் ஆபாத்வாந்தனாக உள்ள ஆவின் பால்‌ பொருட்களின்‌ விலை  அவ்வப்போது உயர்த்தப்பட்டு வருவது, ஆவின் நிர்வாகம், மறைமுகமாக தனியார்‌ நிறுவனங்களுக்கு துணை போகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி வருகின்றன.  மக்கள்‌ நலனைக்‌ கருத்தில், ஏழை எளிய மக்களுக்காக ஆவின்  பால்‌ பொருட்களின்‌ விலையேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆவின் ஐஸ்கிரிம் விலை உயர்த்தி உள்ளதால்,  தனியார் நிறுவனங்களும் ஐஸ்கிரீம் விலையை உயர்த்தும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.