டெல்லி
மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் சுகாதாரத் துறை இணைந்து “ஆரோக்கிய சேது” எனும் கொரோனா விழிப்புணர்வு செயலியை தமிழ் உள்ளிட்ட 11 மொழிகளில் அறிமுகம் செய்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்ட நபர் அல்லது தனிமைப்படுத்தப்பட்ட நபர் நமக்கு அருகில் இருந்தால், “ஆரோக்கிய சேது” நம்மை எச்சரிக்கை செய்யும் என்பதே இச்செயலியின் தனித்தன்மையாகும்.
நம்முடைய பெயர், தொடர்பு எண் போன்ற எந்த ஒரு தனிப்பட்ட தகவலும் மத்திய அரசை தவிர வேறு யாரும் அறிய இயலாது என்பது இச் செயலியின் நம்பகத்தன்மையை உறுதிப் படுத்துகிறது.
COVID-19 ல் இருந்து தற்காத்துக்கொள்ள நாம் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நினைவூட்டும்.
இச்செயலி சோதனை முயற்சியாக “கொரோனா கவச்” என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது “ஆரோக்கிய சேது” என்னும் பெயரில் அதிகாரப்பூர்வமாக மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
GPRS மூலம் இயங்கும் இச்செயலி கொரோனா பாதிக்கப்பட்ட நபரின் வசிப்பிடத்தை மையமாகக் கொண்டு செயல்படும். இத்தொற்று பாதிப்புள்ள இடத்தின் தூரத்தையும் இதன் மூலம் அறியலாம்.