டெல்லி

டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி  கட்சி வேட்பாலர் மகேஷ்குமார் கிச்சி வெற்றி பெற்றுள்ளார்.

மேயர் தேர்தல் டெல்லி மாநகராட்சி விதிகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரலில் நடைபெறும் ஐந்தாண்டு காலத்திற்கு, சுழற்சி அடிப்படையில் மேயர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் முதல் ஆண்டில் ஒரு பெண், இரண்டாவது ஆண்டில் Open கேட்டகரி, மூன்றாம் ஆண்டு பட்டியலின பிரிவு, 4 மற்றும் 5 ஆம் ஆண்டுகளில் ஓப்பன் கேட்டகரி என்ற முறையில் மேயர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற இருந்த தேர்தல் ஆம் ஆத்மிக்கும், பாஜகவுக்கும் இடையே நிலவிய மோதல் காரணமாக, தாமதமானது. எனவே மேயரின் பதவிக்காலம் அதற்கேற்றபடி குறைக்கப்பட் 2025 ஏப்ரலுடன் மகேஷின் பதவிக்காலம் முடிவடைகிறது.

நேற்று நடந்த டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் கிஷன் லாலுக்கும், ஆம் ஆத்மி வேட்பாளர் மகேஷ் குமார் கிச்சிக்கும் கடுமையான போட்டி நிலவியது. பதிவான 265 வாக்குகளில் 2 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. மீதமுள்ள வாக்குகளில் ஆம் ஆத்மி வேட்பாளர் மகேஷ் குமார் 133 வாக்குகளைப் பெற்றார். பாஜக வேட்பாளர் 130 வாக்குகளைப் பெற்றார்.

ஆம் ஆத்மி வேட்பாளர் மகேஷ் குமார் கிச்சி 3 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பாஜகவுடன் நீண்டகாலமாக மோதல் இருந்த நிலையில், ஆம் ஆத்மியின் வெற்றி முக்கியமானதாக கருதப்படுகிறது..