டில்லி,
ஆம்ஆத்மி தலைவர் கெஜ்ரிவால்மீது பரபரப்பு ஊழல் புகார் கூறிய, ஆம்ஆத்மி எம்எல்ஏ கபில் மிஸ்ரா சக எம்எல்ஏக்களால் சட்டசபைக்குள் தாக்கப்பட்டார்.
தலைநகர் டில்லியில் ஆம்ஆத்மியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார்.
நடைபெற்று முடிந்த டில்லி மாநகராட்சி தேர்தலில் ஆம்ஆத்மி தோல்வி அடைந்ததை தொடர்ந்து, கட்சிக்குள் குடுமிப்பிடி சண்டை மூண்டது. அதைத்தொடர்ந்து ஆத்ஆத்மி அரசில் முன்னாள் அமைச்சராக இருந்த கபில் மிஸ்ரா கட்சி தலைவர் கெஜ்ரிவால் மீது ஊழல் புகார் கூறினார்.
அதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்று ஊழலுக்கான ஆதாரங்களை சமர்ப்பித்தார். உண்ணாவிரத போராட்டமும் நடத்தினார். அதைத்தொடர்ந்து கெஜ்ரிவால் மீது சட்டரீதியான போராட்டத்தை தொடங்குவதாகவும், அவரை திகார் சிறைக்கு அனுப்புவது உறுதி என்று கூறி பரபரப்பையும் ஏற்படுத்தினார்.
இந்நிலையில், டில்லியில் நடைபெற்று வரும் கூட்டத்தொடரில் குற்றச்சாட்டு கூறிய கமில்மிஸ்ரா இன்று கலந்துகொண்டார்.
அவரை கண்டதும் ஆத்திரம் அடைந்த சக ஆம்ஆத்மி கட்சி எம்எல்எக்கள் சிலர் சேர்ந்து சட்டசபைக்குள்ளே கபில்மிஸ்ராவை அடித்து உதைத்தனர்.
அவைக்காவலர்கள் விரைந்து வந்து, கமில்மிஸ்ராவை தாக்குதலில் இருந்து விடுத்து மீட்டு சென்றனர்.
இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.