டெல்லி

ம் ஆத்மி எம்  எல் ஏ அதிஷி டெல்லி சட்டசபை எதிர்க்கட்சி தலைவரக தேர்வு செய்யப்பட்டுள்ளர்.

 

கடந்த 5-ந்தேதி ஒரேகட்டமாக நடந்த டெல்லி சட்டசபை ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் என 3 முக்கிய கட்சிகள் மும்முனை போட்டியை ஏற்படுத்தி இருந்தன. தேர்தல் முடிவுகள் கடந்த 8 ஆம்தேதி வெளியான நிலையில், பா.ஜ.க. 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

ரேகா குப்தா என்ற பெண் எம்.எல்.ஏ. டெல்லி முதல்வரால தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுக் கொண்டார்

நேற்று டெல்லி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவி நியமனம் தொடர்பாக நடை[எற்ர ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்கூட்டத்த்தில் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் மற்றும் 22 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், டெல்லி சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக அதிஷியை ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒருமனதாக தேர்வு செய்தனர். இதனால் டெல்லி சட்டசபையின் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர் என்ற பெருமையை அதிஷி பெற்றுள்ளார்.