டெல்லி

ம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அமானத்துல்லா கான் அமலாகத்துறையினரால் கைது செய்யபட்டுள்ளார்.

ஒரு நிறுவனம் மற்றும் 4 பேர் மீது அமலாக்கத்துறை  பதிவு செய்துள்ள குற்றப்பத்திரிகையில் ரூ.100 கோடி மதிப்பிலான வக்ஃப் சொத்துக்கள் முறைகேடாக குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆம் ஆத்மி எம் எல் ஏ அமானத்துல்லா கான் தலைவராக இருந்தபோது டெல்லி வக்ஃப் வாரியத்தில் விதிகளை மீறி 32 ஒப்பந்த ஊழியர்கள் நியமிக்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை முன்வைத்தது,

ஆம் ஆத்மி எம் எல் ஏ அமானத்துல்லா கான் மீதுடெல்லி வக்ஃப் வாரிய வழக்கில் நியமனங்கள் மற்றும் அதன் சொத்துகளை குத்தகைக்கு எடுத்தது தொடர்பாக விசாரணை அமைப்புகள் முன் ஆஜராகாததற்காக புகார் அளிக்கப்பட்டது தெரிந்ததே .அவர் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்ததன் மூலம் விசாரணையில் இருந்து தப்பிப்பதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அமலாக்கத் துறை அமானத்துல்லா கான் வீட்டில் ஆறு மணி நேர சோதனைக்கு பிறகு அவரை கைது செய்தது.

தனது வீட்டிற்கு சோதனை மேற்கொள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தவுடன் அமானத்துல்லா கான் தனது எக்ஸ் பக்கத்தில்

“அமலாக்கத்துறை அதிகாரிகள் என்னை கைது செய்ய என் வீட்டிற்கு வந்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக புலனாய்வு அமைப்பு என்னை தொடர்ந்து துன்புறுத்தி வருகிறது. சோதனை என்கிற பெயரில் அமலாக்கத்துறை என்னைக் கைது செய்ய வந்துள்ளது,

என் மாமியார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார், அவர் தற்போது என் வீட்டில்தான் இருக்கிறார்.

கடந்த 2 வருடங்களுக்கு மேலாக அமலாக்கத்துறை கேட்கும் கேள்விகளுக்கு முறையாக பதில் அளித்து வருகிறேன். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர்”

என்று பதிந்தது குறிப்பிடத்தக்கதாகும்.