நரேந்திர மோடியின் போலி கல்விச் சான்றிதழ் விவகாரம்: ஆம் ஆத்மி கட்சி தோண்டியெடுக்கும் உண்மைகள்
நரேந்திர மோடியின் கல்வித் தகுதி குறித்த சர்ச்சையில் தொடர்ந்து பல உண்மைகள் வெளிவந்த வன்ணம் உள்ளன.
ஆம் ஆத்மி தலைவர் ஆஷிஸ் கேத்தன் இது குறித்து கூறுகையில், “மோடி இளநிலைப் பட்டம் பெற்றதாய் கூறியுள்ள டெல்லி பல்கலைக்கழகத்தில் 1978 ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்றவர் பட்டியலில் மோடியின் பெயர் இல்லை.
நரேந்திர மோடி, தாம் போட்டியிட்ட 2014 நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் படிவத்தில் , தாம் 1978ல் டெல்லி பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் 1983ல் குஜராத் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டம் பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் எங்கள் அளவில் நாங்கள் செய்த முழுச் சோதனையில் , பிரதமர் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி படித்து பட்டம் பெற்றது குறித்த எந்த சான்றும் இல்லை. மாறாக நரேந்திர குமார் மஹாவீர் ப்ரசாத் மோடி எனும் நபர் 1975 முதல் 1978 வரை படித்துள்ள விவரம் மட்டுமே உள்ளது. அவர் ராஜஸ்தானை சேர்ந்த ஆழ்வாரைச் சேர்ந்தவர். ” என்றார். அந்த நபரை என்.டி.டி.வி. நேரில் சந்தித்து பேட்டி கண்டது, அதில் அவர், “தாம் 1975-78 இல் பயின்றதை உறுதி செய்தார். தமக்கு மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மூத்த மாணவர் (சீனியர்) என்று கூறிய அவர். நரேந்திர் மோடியின் பெயருடன் தன் பெயர் ஒத்துப் போவது தமக்கு பெருமை அளிப்பதாக கூறினார்.
பிரதமர் நரேந்திர தாமோதர்தாஸ் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் என சிலப் பத்திரிக்கைகள் வெளியிட்ட சான்றிதழ் போலியானது என்றும் ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.
“இது ஒரு கடுமையாக தண்டிக்கப்படவேண்டிய குற்றம்.
ஆம் ஆத்மி கட்சி, டெல்லி டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆர்.டி.ஐ. எனப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்ததின் படி பிரதமர் படித்ததாகக் கூறப்படும் இளநிலைக் கல்வி குறித்த அவரது அனைத்து ஆவணங்களை கோரி யுள்ளது. குறிப்பாக, “அவரது கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்ப படிவம், பதிவுச் சான்றிதழ், ஒவ்வொருப் பருவ மதிப்பெண் பட்டியல், மற்றும் 1979ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றவர்களின் பட்டியல் தரக் கோரியுள்ளது.
வெள்ளிக்கிழமை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், “மொடியில் கவித்தகுதி குறித்த சர்ச்சை குறித்து செய்தி வெளியிட வேண்டாம் என பல ஊடகங்கள் அறிவுருத்தப்பட்டுள்ளன.
ஆம் ஆத்மி சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பிரதம அலுவலகம் இதுவரை மௌனத்தையே பதிலாகத் தந்துள்ளது. பா.ஜ. கவின் செய்தித்டொடர்கபாளர்களோ “இது பதில் அளிக்கக் கூடிய முக்கியச் பிரச்சனை இல்லை ” என்றும் கூறியுள்ளது. மத்திய அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் “இந்த குற்றச்சாட்டுகளுக்கு முக்கியத்துவம் தர விரும்ப வில்லை. ஒன்றை மட்டும் என்னால் கூறமுடியும். இப்படி பிரதமரின் கல்வித்தகுதி குறித்து குற்றச்சாட்டு வைப்பது ஒரு முதல்வரின் தகுதிக்கு அழகில்லை”என்றார்.