டெல்லி
நேற்று ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகிய முன்னாள் டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் இணைந்துள்ளார்.
முதல்வர் அதிஷி தலைமையிலான டெல்லி ஆம் ஆத்மி அரசில், உள்துறை, போக்குவரத்து, நிர்வாக சீர்திருத்தம், தகவல் தொழில்நுட்பம், பெண்கள், குழந்தைகள் மேம்பாடு போன்ற முக்கிய இலாகாக்களின் அமைசராக கைலேஷ் கெலாட் பதவி வகித்து வந்தார். .
நேற்று ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி தனது அமைச்சர் பதவியையும் கைலாஷ் கெலாட் ராஜினாமா செய்தார். லஒ;ஆச்ஜொம் ராஜினாமாவை முதல்-மந்திரி அதிஷி ஏற்றுக்கொண்டார்., ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எழுதிய ராஜினாமா கடிதத்தில், கெஜ்ரிவாலை கைலாஷ் கெலாட் கடுமையாக குற்றம்சாட்டி இருந்தார்.
நேற்று ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகிய டெல்லி முன்னாள் மந்திரி கைலாஷ் கெலாட் இன்று பாஜகவில் இணைந்து கொண்டார். கைலாஷ் கெலாட் மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் மற்றும் பாஜக தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
வரும் ஆண்டு பிப்ரவரி மாதம் நடக்க உள்ள டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மி தயாராகி வரும் நிலையில், கைலாஷ் கெலாட்டின் விலகல், ஆம் ஆத்மிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.