ஹனா
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் அத்மி நிர்வாகி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
தர்லோஜன் சிங் என்பவர் பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவடம் ஹனா பகுதி இகொலனா கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். ஹனா பகுதி ஆம் ஆத்மி விவசாய பிரிவு தலைவராக தர்லோஜன் சிங் செயல்பட்டு வருகிறார்.
நேற்று மாலை ஆம் ஆத்மி நிர்வாகியான இவர் தனது தோட்டத்தில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது பைக்கில் வந்த சிலர் தர்லோஜன் சிங் மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றனர்.
அக்கம்பக்கத்தினர் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த தர்லோஜன் சிங்கை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தர்லோஜன் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவதுறையினர் தர்லோஜனை சுட்டுக் கொன்று விட்டு தப்பிச்சென்ற கும்பலை தேடி வருகின்றனர். இந்த கொலை அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.