கமதாபாத்

ரும் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட உள்ளது.

வரும் ஆண்டு குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.  பாஜகவின் விஜய் ரூபானி முதல்வராக உள்ளார்.  இதில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் போட்டியிட உள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சியும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.  ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அகமதாபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், “ஆம் அத்மி கட்சி வரும் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது.   தற்போது டில்லியில் இலவச மின்சாரம் உள்ள நிலையில் குஜராத்தில் அது சாத்தியம் இல்லை என மக்கள் நினைக்கின்றனர்.   இதைப் போல் கடந்த 70 ஆண்டுகளாகக் குஜராத்தில் மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளின் நிலை எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது.   தற்போது நிகழும் எவ்வித மாற்றமும் குஜராத்தில் கொண்டு வரப்படவில்லை.

அனைத்து மாநிலங்களுக்கும் அந்த மாநிலங்களுக்கே உரியப் பிரச்சினைகள் உள்ளன.  அவற்றுக்கான தீர்வுகளும் உள்ளன.   எனவே குஜராத்துக்கான திட்டத்தை அம்மாநில மக்களே  தீர்மானிப்பார்கள்,  இம்மாநில மக்களுக்கு பாஜக மற்றும் காங்கிரஸுக்கு மாற்றாக ஆம் ஆத்மி விளக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.