டில்லி
ஆம் ஆத்மியின் தெற்கு டில்லி தொகுதியின் வேட்பாளர் ராகவ் சத்தாவை பல பெண்கள் மணமுடிக்க விருப்பம் கொண்டுள்ளனர்.
ஆம் ஆத்மியின் அரசியல் விவகார குழுவின் உறுப்பினரான ராகவ் சத்தா மணமாகாத ஆடிட்டர் ஆவார். அவர் பார்க்க மிகவும் அழகானவர் ஆவார். அத்துடன் அறிவாளி எனவும் கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பாராட்டை பெற்றவர். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு ஜன் லோக் பால் மசோதாவை வடிவமைத்ததில் இருந்தே இவருக்கு கட்சியில் புகழ் அதிகரிக்கத் தொடங்கியது.
தற்போதைய மக்களவை தொகுதியில் தெற்கு டில்லி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக ராகவ் சத்தா நிறுத்தப்பட்டுள்ளார்.
சுமார் 30 வயதாகும் ராகவ் சத்தாவின் அழகான புகைப்படங்களை கண்டு பல பெண்கள் ஆசை கொண்டுள்ளனர். கடந்த எட்டு மாதங்களாகவே இவருடைய புகைப்படங்களை கண்ட பெண்கள் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவருக்கு திருமண விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து தெற்கு டில்லியின் ஊடக தொடர்பாளர் கோன்பால் பாட்னி, “இது போல செய்திகள் வருவதை நாங்கள் அவருக்கு தெரிவித்தோம். ஆனல் அவர் அதை கண்டுக் கொள்ளவில்லை. அவருக்கு பலர் வீடியோ அழைப்புக்கள் விடுக்கின்றனர். அத்துடன் பலர் ஆடியோ செய்திகளையும் அனுப்பி வருகின்றனர். அவர்களுக்கு நாங்கள் ’நன்றி, ராகவ் சத்தாவுக்கு வாக்களியுங்கள்’ என்னும் பதிலை மட்டுமே அளித்து வருகிறோம்.” என கூறி உள்ளார்.
இது குறித்து ராகவ் சத்தா, “எங்கள் கூட்டங்களுக்கும் பேரணிகளுக்கும் பெண்கள் அதிக அளவில் வருகின்றனர். நான் ஆண்களிடம் உங்கள், மனைவி,மகள் அல்லது தாயை வாக்களிக்கும் போது நினைத்துக் கொள்ளுங்கள். பாஜகவின் ரமேஷ் பிதூரி மக்களவை உறுப்பினரானால் அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்களா எனபதை யோசியுங்கள் எனகூறுவேன்” என தெரிவித்துள்ளார்.