டெல்லி: எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இண்டியா கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஆம்ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அக்கட்சி தலைவர் கெஜ்ரிவால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

 2024 மக்களவை தேர்தலின்போது, பாஜக-வை தோற்கடிக்க காங்கிரஸ், திமுக, திரிணாமுல், ஆத்ஆத்மி   உள்பட 28 கட்சிகள் இணைந்து மாபெரும்  கூட்டணி அமைத்ததன. இந்த கூட்டணிக்கு இண்டியா என்றும் பெயர் சூட்டப்பட்டது. ஆனால்  . இந்த கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை ஏற்றாலும்  அரசியல் ரீதியாக இக்கட்சிகளுக்குள் புகைச்சல் வந்துகொண்டே இருந்தது.  இதனால் அவ்வப்போது சலசலப்பு ஏற்பட்டது. பின்னர், இந்த கூட்டணி  2024 மக்களவை தேர்தலுக்காக மட்டுமே அமைக்கப்பட்டது என கூறி பல கட்சிகள் அதிலிருந்து வெளியேறின. இருந்தாலும் நாடாளுமன்ற விவாதங்களின்போது மட்டும், பாஜகவுக்கு எதிராக கோஷமிடுவதில் ஒன்றிணைந்தன.

இந்த நிலையில்,  தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி வெளியேறுவதாக, அக்கட்சியின் தேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கெஜ்ரிவால், ரவீந்திரநாத் தாகூரின் புகழ்பெற்ற பாடலான ‘தேவைப்பட்டால் தனியாக நட’ என்பதிலிருந்து ஈர்க்கப்பட்ட ‘ஏக்லா சோலோ ரே’ உத்தியை ஆம் ஆத்மி இப்போது ஏற்றுக்கொள்கிறது. மீண்டும் தனியாக நடப்பதன் மூலம், ஆம் ஆத்மி வாக்காளர்களின் நம்பிக்கையை மீண்டும் பெறவும், அதன் முக்கிய மதிப்புகளை வலுப்படுத்தவும், ஒரு காலத்தில் இந்திய அரசியலில் ஒரு சக்தி வாய்ந்த சக்தியாக மாற்றிய ஆற்றலை மீட்டெடுக்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா கூட்டணி மக்களவைத் தேர்தல்களுக்கு மட்டுமே என்றும், அதன் பின்னர், ஆம் ஆத்மி கட்சி அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் சுயேச்சையாகப் போட்டியிட்டதாக தெரிவித்ததுடன்,  இந்தியா கூட்டணியின் ஒரு பகுதியாக டெல்லியில் மக்களவைத் தேர்தலில் கட்சி போட்டியிட்டது, ஆனால் ஹரியானா மற்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தல்களில் தனித்தனியாகப் போட்டியிட்டது. வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தல்களில் சுயேச்சையாகப் போட்டியிடும் நோக்கத்தையும் அது அறிவித்துள்ளது.

இருப்பினும்,  ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுடன் மூலோபாய கூட்டணிகளைக் கொண்டிருக்கும் ,  நாங்கள் பெரும்பாலும் நாடாளுமன்றப் பிரச்சினைகளில் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) போன்ற கட்சிகளிடமிருந்து ஆதரவை நாடுவதாக தெரிவித்துள்ள துடன்,  “நாங்கள் எப்போதும் வலுவான மற்றும் சக்திவாய்ந்த எதிர்க்கட்சியாகப் பணியாற்றி வருகிறோம், அவ்வாறு செய்வோம்” என்றும் தெரிவித்துள்ளார்.