டில்லி:
ஆதார் புதிய பாதுகாப்பு அடுக்குகள் குதிரைகள் ஓடிய பிறகு சேனத்துக்கு பூட்டு போடுவது போன்றதாகும் என ப.சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்தார்.

16 இலக்க தற்காலிக எண்ணை ஆதார் எண்ணிற்கு பதிலாக பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுளளது. இதற்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டரில், ‘‘கட்டாயத்தின் கீழ் கோடி கணக்கான மக்கள் ஏற்கனவே பல சேவைக்காக ஆதார் எண்ணை பகிர்ந்து கொண்டுள்ளனர். புதிய பாதுகாப்பு அடுக்குகள் குதிரைகள் ஓடிய பிறகு சேனத்துக்கு பூட்டு போடுவது போன்றதாகும்’’ என்று தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]