டெல்லி: ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றை குடியுரிமைக்கான ஆவணங்களாக கருத முடியாது என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

குடியுரிமை சட்டப்படி, தேவையான ஆவணங்கள் என்ற பட்டியல் சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் வெளியானது. அந்த ஆவணங்களின் பட்டியலில் வாக்காளர் அடையாள அட்டையும் இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகின.

ஆனால் அப்படி இல்லை என்று மத்திய அரசு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறி இருப்பதாவது: மொத்தம் 13 கேள்விகள் பதில்கள் வடிவில் அந்த தகவல்கள் இடம்பெற்றிருந்தன.

ஆனால் அந்த தகவல்களில் உண்மையில்லை. தேசிய குடியுரிமைக்கான ஆவணங்கள் என்ன என்பது இப்போது ஏதும் கூறமுடியாது. முன்கூட்டியே ஆவணங்கள் இவைதான் என்று குறிப்பிட முடியாது.

இந்த ஆவணங்கள் எல்லாம் பயணத்துக்கான அத்தாட்சியாக காணப்படும் ஆவணங்களே. அதற்காக தான் அதை பயன்படுத்த முடியும் என்று கூறினர்.

வெளியுறவு செய்தி தொடர்பாளர் தரப்பில், பிறந்த தேதி அல்லது பிறந்த இடம் இவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி குடியுரிமையை நிரூபிக்க முடியும். ஆனால் அவற்றுக்கு மாறாக இந்த பட்டியியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.