டில்லி,
ரசின் நலத்திட்ட உதவிகளை பெற பெற ஆதார் எண் கட்டாயமில்லை என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் அனைத்து வகையான திட்டங்களுக்கும் ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டு, ஆதார் எண்ணை அனைத்து பரிவர்த்தனைகளுடன் இணைக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், ஆதார் எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில், நீதிபதிகள், அரசின் நலத்திட்ட உதவிகளை பெற ஆதார் எண்ணை கட்டாயமாக்க கூடாது என்று உத்தர விட்டனர்.

அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாய மில்லை, வேறு ஆதாரங்களையும் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது .

இதையடுத்து, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்,

“நலத் திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயமில்லை என்றும், அதற்கு பதிலாக குடும்ப அட்டை, ஓட்டுநர் அட்டை உள்ளிட்ட வேறு அடையாள அட்டைகளை பயன்படுத்தலாம் என்று கூறி யுள்ளார்.