ரேஷனில் மண்ணெண்ணெய் வாங்க ஆதார்: மக்கள் அதிர்ச்சி

Must read

டில்லி,

ரேஷனில் மண்ணெண்ணெய் வாங்க ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு உத்தர விட்டுள்ளது. இது பொதுமக்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் ஏழை மக்கள் ரேஷனில் மண்ணெண்ணெய் வாங்கி வந்தனர். தற்போது, அதற்கும் கட்டுப்பாடுகளை விதித்து மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது.

ரேஷனின் மண்ணெண்ணெய்  மானியம் மற்றும்  ஓய்வூதிய திட்டப் பலன்களைப் பெற, ஆதார் எண் கட்டாயம் என, மத்திய அரசு அறிவித்துள்ளது

இந்த 2 திட்டங்களிலும் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் மானியப் பலன்கள், பிறருக்குச் சென்றடைவதை தடுக்கும் நோக்கில், ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண் கிடைக்கவில்லை எனில், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய கிசான் விகாஸ் கணக்குப் புத்தகம் ஆகியவை அடையாள சான்றாக ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் மானியத்துக்கு ஆதாரைப் பெற அல்லது ஆதாருக்கு அடையாளங்களைப் பதிவு செய்ய, செப்டம்பர் 30ம் தேதி கடைசி நாளாகும்.

அடல் ஓய்வூதியத் திட்டத்தை பொறுத்த வரையில், ஆதாரைப் பெறுவதற்கு ஜூன் 15ம் தேதி கடை நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article