ctctqesvuaarfi7
ஆதித்ரவிசந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் (AAA) இத்திரைப்படத்தில் சிம்பு மூன்று வேடங்களில் நடிக்கின்றார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். சில நாட்களுக்கு முன்பு இப்படத்தில் சிம்பு நடிக்கும் ஒரு கதாபாத்திரத்தின் ரகசியத்தை வெளியிட்டனர். அது என்னவென்றால் இத்திரைப்படத்தில் சிம்பு அஸ்வின் தாத்தாவாக நடிக்கின்றார் என்பதுதான்.
சிம்பு தாத்தாவா என்ற அதிர்ச்சியில் இருந்து மீளாத அவரின் ரசிகர்களுக்கு சிம்பு மேலும் ஒரு அதிர்ச்சியை தந்தார் அது என்னவென்றால் அவர் நடிக்கும் அந்த அஸ்வின் தாத்தாவின் புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில் சிம்பு கிட்டத்தட்ட படையப்பா ரஜினி போல் உள்ளார் என்று அனைவரும் கூறிவருகின்றனர்.
இத்திரைப்படத்தை வரும் பொங்கலுக்கு வெளியிட அனைத்து பணிகளும் நடைபெற்று வருகின்றது.