பம்பை:
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் சென்று தோற்றத்தை மாற்றி வயதான தோற்றத்தில் சென்று அய்யப்பனை தரிசித்துவிட்டு வந்துள்ளதாக கேரளாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கூறி உள்ளார். இது அய்யப்ப பக்தர்களிடையே மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதி மன்ற அனுமதியை தொடர்ந்து இளம்பெண்கள் பலர் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் செல்ல முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், அய்யப்ப பக்தர்கள், பந்தள அரச குடும்பம் மற்றும் கோவில் தந்திரிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக பெண்கள் கோவிலுனுள் அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.
ஆனால், மாநில அரசு பெண்களை கோவிலுக்குள் அனுப்புவதை திட்டமிட்டு நிறைவேற்றி வருகிறது. அதன்படி கனகதுர்கா (44), பிந்து(42) என்ற 2 பெண்களை காவல்துறையினர் கோவிலின் புறவாசல் வழியாக அழைத்துச் சென்று அதிகாலை 3.30 மணி அளவில் தரிசனம் செய்ய வைத்த னர். அதைத்தொடர்ந்து கோவில் நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜைகள் செய்யப்பட்டன.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து கேரளாவில் பல இடங்களில் போராட்ட மும் நடைபெற்றது. அந்த வேளையில் இலங்கையை சேர்ந்த ஒரு பெண் கோவிலுக்கு செல்ல முயன்றது மேலும் பரபரப்பை கூட்டியது.
இநத் நிலையில், 35 வயது கேரள பெண் ஒருவர் வயதானவர்போல் மேக்கப் போட்டுக் கொண்டு, 18 படியேறி அய்யப்பனை சாமி தரிசனம் செய்ததாக கூறி உள்ளார். இந்த சம்பவம் பக்தர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகர விளக்கு பூஜைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த 35 வயதான மஞ்சு என்பவர் அய்யப்பன் கோயிலில் 18 படி ஏறி தரிசனம் செய்த வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
தான் வயதானவர் போல வேடமிட்டு, அதற்கான ஆதாரங்களை சமர்பித்து கோவிலுக்குள் சென்று வந்ததாக தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தனது தோற்றத்தை வயதானவர் போல் மாற்றி தலைமுடிக்கு வெள்ளை ‘டை’ அடித்து, மாறு வேடமணிந்து கோவலுக்குள் செல்வது போன்று தெரிகிறது. இச்சம்பவம் மீண்டும் சபரிமலையில் இந்து அமைப்புகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
[youtube-feed feed=1]