சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலையில் திடீர் திருப்பமாக இயக்குநர் நெல்சனின் மனைவியிடன் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் கைது செய்யப்பட்டுள்ள பிரபல ரவுடிக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, இயக்குனர் நெல்சன் திலீப்குமாரிடமும் விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டு உள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5-ஆம் தேதி சென்னை பெரம்பூர் பகுதியில் அவர் புதிதாகக் கட்டி வந்த வீட்டின் முன்பு வைத்துப் மாலை நேரத்தில் படுகொலை செய்யப்பட்டார். 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டி வீழ்த்தியது. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து தமிழ்நாடு அரசு தனிப்படை அமைத்து விசாரணை நடத்திவ ருகிறது. . இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 24 பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருக்கிறனர். சமீபத்தில் ஏற்கனவே கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேசின் மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, தற்போது, இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் மனைவி மோனிஷாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடிகளுக்கும் இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷாவுக்கும், இடையே தொடர்பிருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளியான மொட்டை கிருஷ்ணனுக்கு மோனிஜா அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே மோனிஷா பல முறை, தலைமறைாவக உள்ள பிரபல ரவுடி மொட்டை கிருஷ்ணன் என்பவருடன் தொலைபேசியில் பேசி இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப்குமாரிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.