டில்லி:
ராமர் பிறந்த இடமான அயோத்தில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் உமாபாரதி மற்றும் உ.பி. மாநில துணை முதல்வர் மவுரியா வலியுறுத்தி உள்ளனர்.
அயோத்தி சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி நிலம் விவகாரம் தொடர்பான மேல்முறையீடு மனுக்களை மீதான விசாரணையை தொடர்ந்து, இந்த விவகாரத்தை மத்தியஸ்தர்கள் மூலம் பேசி 8 வாரங்களுக்குள் தீர்வு காண 3 பேர்களை கொண்ட மத்தியஸ்தர் குழுவை உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது.
அதன்படி, ஓய்வு பெற்ற முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி இப்ராஹிம்கலிபுல்லா தலைமை யில், ஸ்ரீஸ்ரீரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் கொண்ட 3 பேர் குழுஅமைக்கப் பட்டு உள்ளது.
இந்த நிலையில், உச்சநீதி மன்றத்தின் மத்தியஸ்தர் குழுவுக்கு வரவேற்பும் எதிர்ப்பும் கிளம்பி உள்ள நிலையில், ராமர் பிறந்த இடமான அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பதை மத்திய அமைச்சர் உமாபாரதி வலியுறுத்தி உள்ளார்.
உச்சநீதி மன்ற தீர்ப்பு குறித்து பேசிய உமாபாரதி, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. அதுபோ நீதிமன்றம் நியமித்துள்ள மத்தியஸ்தர்களிடமும் கருத்து தெரிவிக்க நான் விரும்பவில்லை. ஆனால் நான் ஒரு ஹிந்து, நான் நினைக்கிறேன், ராமர் பிறந்த இடத்தில் ஒரு கோவில் உருவாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
உ.பி. துணைமுதல்வர் கே.பி.மவுரியா கூறும்போது, ராமர்கோவில் விவகாரத்தில் உச்ச நீதி மன்றமும் தீர்வை எட்ட பல முயற்சிகள் மேற்கொண்டன. ஆனால் வெற்றி பெறவில்லை. அயோத்தியில் ராம் மந்திர் கட்டுமானத்தில் தாமதம் ஏற்படுவதை ராம பக்தர்களும், துறவிகளும் விரும்பவில்லை என்று என்று தெரிவித்து உள்ளர்.