லக்னோ: லகிம்பூர் கேரி வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷன் அமைத்துள்ளது உ.பி. அரசு உத்தரவிட்டு உள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில், லகிம்பூர் கேரி பகுதியில் கடந்த 10-ந் தேதி அரசு விழா ஒன்றுக்கு, துணை முதல்-மந்திரி கேசவ் மவுரியா, மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி அஜய் மிஸ்ரா ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். அங்கு விவசாயிகள் அவர்களுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது , மத்திய அமைச்சர் மகன் சென்ற காரைக்கொண்டு விவசாயிகள் மீது மோதினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு வன்முறை ஏற்பட்டது. இதில் 4 விவசாயிகள் 4 பாஜகவினர், பத்திரிகையாளர் ஒருவர் என மொத்தம் 9 பேர் பலியாகினர்.
வன்முறையைத் தொடர்ந்து. லகிம்பூர் கெரி பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுஉள்ளனர். லக்னோவிலும் நேற்று இரவு முதல் 144 போடப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. உச்சநீதிமன்றமும் தானாகவே முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.
இந்த நிலையில், லக்கிம்பூரில் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஒருநபர் ஆணையம் அமைத்து உ.பி. அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பிரதீப்குமார் ஸ்ரீவஸ்தவா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை யோகி தலைமையிலான பாஜக மாநிலஅரசு வெளியிட்டுள்ளது.