மரணத்தை வென்று என்றும் இளமையுடன் நீடித்த ஆண்டுகள் உயிர்வாழ்வது சாத்தியமா? சாத்தியம் என்று நம்புகிறார் ரஷ்ய விஞ்ஞானி டாக்டர் அனடோலி ப்ரச்கோவ். அதை சாத்தியமாக்க 35 லட்சம் ஆண்டுகால பழமையான பாக்டீரியாவை இவர் தனது உடலினுள் செலுத்தியிருக்கிறார்.
கடந்த 2009-ஆம் ஆண்டு பேசில்லஸ் எஃப் என்ற 35 லட்சம் ஆண்டுகால பழமையான இவ்வகை பாக்டீரியாக்கள் சைபிரியாவின் பனிப்பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பேக்டீரியாக்களின் உடலில் உள்ள ஏதோ ஒரு அம்சம்தான் அதை இத்தனை லட்சம் ஆண்டு காலங்கள் இதை உயிருடன் வாழச் செய்துள்ளது என்பதை உணர்ந்த அனடோலி ப்ரச்கோவ் அந்த பாக்டீரியாவை உடலுனுள் செலுத்துவதன் மூலம் நாமும் மரணத்தை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையில் அந்த பேக்டீரியாவை தனது உடலுக்குள் செலுத்தியிருக்கிறார்.
இவர் மரணத்தை வெல்வாரா? என்றும் இளமையுடன் மார்க்கண்டேயனாக வாழ்வாரா என்பதற்கான பதிலை காலம்தான் சொல்ல வேண்டும். ஆனால் இந்த பாக்ட்டீரியாவை உடலினுள் செலுத்திய பின்பு தான் மிகவும் உற்சாகமாகவும் புதிய பலத்துடனும் திகழ்வதாகவும், தனது உடலில் ஏதோ நல்ல மாற்றம் ஏற்பட்டு வருவதை உணர்வதாகவும் தெரிவித்துள்ளார்.