சென்னை: ரூ.200 கோடி மோசடி தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகரின் பெண் தோழியான ‘மெட்ராஸ் கஃபே’ கேரள நடிகை லீனா மரியம்பால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை 15 நாட்கள் போலீஸ் விசாரணைக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு உள்பட பல்வேறு மோசடி வழக்குகளில் தொடர்புடையவர் தரகர் சுகேஷ் சந்திரசேகர். இவரது தோழி நடிகை லீனா மரியா. இவர் மெட்ராஸ் கஃபே திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் பல மலையாளப்படங்களிலும் நடித்துள்ளார். இவர், தரகர் சுகேஷ் சந்திராவின் ஆசை நாயகியாக இருப்பதாக கூறப்படுகிறது. சுகேஷ் சந்திராவின் மோசடிகளுக்கு இவர் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
சுகேஷ் சந்திரசேகர்மீது ரூ.200 கோடி வரையிலான மோசடியில் சிக்கி உள்ள நிலையில், மருந்து நிறுவனமான ரான்பாக்ஸியின் முன்னாள் தலைவர் ஷிவந்தர் சிங்கின் மனைவியை ஏமாற்றி மோசடி செய்த புகாரில் நடிகை லீலான மரியா கைது செய்யப்பட்டு உள்ளதாக, டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள லீனா மரியாவிடம் 28 நாட்கள் விசாரணை நடத்த அனுமதி கோரி டெல்லி காவல்துறையினர் நீதி மன்றத்தில் மனு கொடுத்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிமன்றம், 28 நாட்கள் கோரிக்கையை மறுத்த நீதிமன்றம் 15 நாட்கள் காவலில் விசாரிக்க டெல்லி காவல்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
ஏற்கனவே டிடிவி தினகரன் தரப்பில், இரட்டை இலையை தங்களது அணிக்கு பெற, தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு தை லஞ்சம் கொடுத்து பெற்றுத் தருவதாக கூறி முறைகேடு செய்த வழக்கு உட்பட பல்வேறு மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்ட தரகர் சுகாஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்மீது ரூ.200கோடி மோசடி வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில், அவரது காதலி லீனா மரியம்பால் மீதும் 200 கோடிக்கும் மேல் சட்டவிரோத பணபரிமாற்றம் செய்ததாக அமலாக்கத் துறை தனியாக மற்றொரு வழக்கை பதிவு செய்தது.
இதற்கிடையில், சென்னை இந்தியன் வங்கியில் 19 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் சுகாஷ் சந்திரசேகர் மீண்டும் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு உடந்தையாக இருந்த டிகை லீனா மரியா பாலும் கைது செய்யப்பட்டு உள்ளார். சென்னையில் உள்ள வங்கியில் ரூ.18 கோடி மோசடி செய்ததாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.