டில்லி

பாரத ஸ்டேட் வங்கியின் சேர்மன் அருந்ததி பட்டாச்சார்யா ஓய்வு பெறுவதையொட்டி புது சேர்மனுக்கான தேர்வு நடைபெறுகிறது.  களத்தில் உள்ளவர்களைப் பற்றிய ஒரு அலசல் இதோ

பாலசுப்ரமணியம் ஸ்ரீராம்,  ரஜினீஷ் குமார்,  பிரவீன்குமார் குப்தா, மற்றும் தினேஷ்குமார் காரா ஆகியோர் இது வரை நேர்காணலில் கலந்துக் கொண்டுள்ளனர்.

பாலசுப்ரமணியம் ஸ்ரீராம்,  28 வருடங்கள் அனுபவம் உள்ளவர். வங்கியின் பல துறைகளிலும் பணி புரிந்தவர்,   செயிண்ட் ஜோசப் கல்லூரியில் படித்து எம் எஸ் சி பட்டம் பெற்றவர்.  நிர்வாக இயக்குனர், இயக்குனர் போன்ற பதவிகளை வகித்தவர்.

வங்கி தவிர பல அரசு மற்றும் தனியார் துறைகளிலும் முக்கிய பதவி வகித்தவர்.

ரஜனிஷ் குமார் 30 வருடங்கள் அனுபவம் உள்ளவர்.  துணை இயக்குனர், வங்கியின் தலைமை அதிகாரி போன்ற பல பதவிகளை வகித்தவர்.  இவரும் ஒரு முதுகலைப் பட்டதாரி.

இவரும் பல அரசு மற்றும் தனியார் துறைகளில் தலைமைப் பதவி வகித்தவர்.

பிரவீன்குமார் குப்தா வங்கியில் 33 வருடங்கள் அனுபவம் உள்ளவர்.  இவர் பல துறைகளிலும் பணி புரிந்தவர்,  தலைமை அதிகாரி, மற்றும் இயக்குனர் பதிவிகளை வகித்த முதுகலை பட்டதாரி.

பல அரசு மற்றும் தனியார் துறைகளில் தலைமைப் பதவி வகித்தவர்

தினேஷ்குமார் காரா வங்கியில் 28 வருடங்கள் அனுபவம் உள்ளவர். எம் பி ஏ படித்தவர்.  பல துறைகளிலும் தலைமைப் பகுதி வகித்தவர்.  இயக்குனராகவும் பணி புரிந்தவர்.

இவரது பணிகள் முழுவதுமே வங்கிகளில் மட்டுமே.

இந்த நால்வரில் ஒருவர் சேர்மன் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.