லண்டனில் உள்ள டிரினிட்டி லாபன் இசை காப்பகத்தின் கௌரவ தலைவராக ஏ.ஆர். ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இசை, இசை நாடகம், தற்கால நடனம் ஆகியவை குறித்த டிரினிட்டி லாபன் இசை காப்பகம் பிரிட்டனின் ஒரே காப்பகமாக விளங்குகிறது.
டிரினிட்டி லாபன் அமைப்பின் கௌரவ தலைவராக ஏ.ஆர். ரஹ்மான் ஐந்து ஆண்டுகளுக்கு செயல்படுவார்.
இந்த இசைக்காப்பகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று லண்டனில் நடைபெற்றது, அப்போது ஏ.ஆர். ரஹ்மானுக்கு இந்த கெளரவம் வழங்கப்பட்டது.
இந்தியாவில் 125 ஆண்டுகால இசைக் கல்வி வரலாற்றைக் கொண்ட டிரினிட்டி லாபன், 2008ம் ஆண்டு ஏ.ஆர். ரஹ்மான் நிறுவிய கே.எம். இசை காப்பகத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.
தவிர இசைப் பயிற்சி தொடர்பாக ஏ.ஆர். ரஹ்மான் மேற்கொண்டு வரும் பல்வேறு முயற்சிகளுக்கு டிரினிட்டி லாபன் ஆதரவளித்து வருகிறது.
தற்போது டிரினிட்டி லாபன் அமைப்பின் கௌரவ தலைவராக ஏ.ஆர். ரஹ்மான் நியமிக்கப்பட்டிருப்பது மிகவும் பெருமைக்குரிய ஒன்றாக அதன் தலைவர் பேராசிரியர் அந்தோணி பௌனே கூறியுள்ளார்.
மேலும், இதனை கொண்டாடும் விதமாக 2025 மார்ச் 25ம் தேதி லண்டன் ப்ளாக்ஹீத் ஹாலில் இசைக்கச்சரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.