ஓடும் விமானத்தின் கதவை திறந்த பயணி : அதிர்ச்சியூட்டும் சம்பவம்

டில்லி

டில்லி – ராஞ்சி விமானத்தில் விமானம் இறங்கும் முன் ஒரு பயணி அவசரத்துக்கு வெளியேறும் கதவை திறந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது.

ராஞ்சியை சேர்ந்தவர் அஃப்தாப் அகமது.  இவர் நேற்று இரவு டில்லியிலிருந்து ராஞ்சிக்கு ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்தார்.  விமானம் தரையிறங்கும் முன்பே அங்குள்ள அவசர கால வெளியேறும் கதவை (EMERGENCY EXIT) திறந்தார்.  அதனால் மற்ற பயணிகள், மற்றும் விமானக் குழுவினர் பதற்றம் அடைந்தனர்.  அவரை தடுக்க முயன்ற சில பயணிகள் மற்றும் குழுவினரையும் தாக்கினார்.  அனைவரும் சேர்ந்து அவரை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

விமான நிலைய காவல்துறை அவரைக் கைது செய்துள்ளது.

அவர் அப்படி நடந்ததற்கான காரணம், மற்றும் எந்த விவரத்தையும் ஏர் ஏசியா இதுவரை வெளியிடாமல் உள்ளது

 


English Summary
A passenger opened emergency exit of Air Asia flight before landing shocked others