வாரணாசி
வாரணாசி – மும்பை விமானத்தில் ஒரு விமானப் பயணி மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.
இன்று காலை 10.20 மணிக்கு இண்டிகோ விமான நிறுவனத்தின் ஒரு விமானம் வாரணாசியில் இருந்து மும்பை செல்ல கிளம்பி உள்ளது. அது கிளம்பி ஓடுதளத்தில் ஓடிக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு பயணி மாரடைப்பு ஏற்பட்டு விமானத்திலேயே மரணம் அடைந்துள்ளார்.
மரணம் அடைந்தவர் பெயர் ஐ பி திரிபாதி எனவும் அவர் வயது 65 எனவும் தெரிவித்த விமான அதிகாரிகள் அவர் தனியாக பயணம் செய்ததாகவும் கூறினார்கள். இது குறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.