திருமலை லட்டு சர்ச்சையில் புதிய திருப்பமாக ஆந்திர உயர்நீதிமன்றத்தில்முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது.
திருப்பதி கடவுளின் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை களைய நீதிமன்றத்தின் நடவடிக்கையை நாடி YSR காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டுள்ளதாக முதல்வர் சந்திரபாபு தெரிவித்த கருத்து குறித்து விசாரணை நடத்தக் கோரி ஒய்.வி.சுப்பாரெட்டி, எம்பி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
பதவியில் இருக்கும் நீதிபதி அல்லது உயர்நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுமீதான விசாரணை வரும் புதன்கிழமை (செப். 25ம் தேதி) எடுத்துக்கொள்ளப்படும் என்று ஆந்திர உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருப்பதி லட்டு பிரசாத கலப்பட விவகாரம்… ஹெரிடேஜை நிலைநிறுத்துவாரா சந்திரபாபு நாயுடு ? வீடியோ