சென்னை: தமிழகத்தில்,90 ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு நகரும் நியாய விலைக்கடை உருவாக்கப்பட்டு இருப்பதாக தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ சட்டப்பேரவை யில் கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடரின் 2வது நாள் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. இன்று கூட்டத்தொடர் தொடங்கியதும், முதலில் கேள்வி நேரம் மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது, தர்மபுரி சட்டப்பேரவை உறுப்பினர், ரேசன் கடைகள் தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, முதலில் எப்போதும் போல முதல்வர், எடப்பாடியை புகழ்ந்து தள்ளினார். மன்னாதி மன்னன், தமிழகத்தின் நம்பர்1 முதல்வர், நல்லாட்சித் தந்த விவசாயி என மனம்போன போக்கில் வாழ்த்திவிட்டு, பின்னர் கேள்விக்கு பதில் அளித்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் 23 நகரும் நியாயவிலைக்கடைகள் தொடங்கப்படவுள்ளது. தமிழ்நாட்டில் 90 ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு நகரும் நியாய விலைக்கடை செயல்பட்டு வருவதாகவும், ஒரே நேரத்தில் 3,501 நகரும் நியாயவிலைக் கடைகளை திறக்க தமிழகஅரசு அனுமதி வழங்கியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்