டில்லி:
கேரளாவைச் சேர்ந்த துஷாரா (வயது 20) என்பவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நந்தகுமார் (வயது 20) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இதை எதிர்த்து துஷாராவின் தந்தை கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மகளை நந்தகுமார் கடத்திச் சென்றுவிட்டார். அவருக்கு 21 வயது பூர்த்தியாகாமல் திருமணம் செய்துள்ளார் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து திருமணத்தை ரத்து செய்து உயர்நீதிமனறம் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று கூறுகையில், ‘‘துஷாரா 18 வயதை கடந்துவிட்டார். பிடித்தவருடன் வாழ முழு சுதந்திரம் உள்ளது. அந்த ஆணுக்கு 21 வயது பூர்த்தி ஆகியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. பிடித்த வயதுக்கு வந்த ஆணுடன் சேர்ந்து வாழ பெண்ணுக்கு உரிமை உள்ளது.
வயதுக்கு வந்த ஆணும், பெண்ணும் திருமண வயதை அடையவில்லை என்றாலும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் உரிமை உண்டு. அவர்கள் தங்களின் விருப்பத்தை தேர்வு செய்ய உரிமை கொண்டவர்கள்’’ என்று தெரிவித்துள்ளனர்.