சென்னை:  தமிழகத்தில் 100 இடங்களில் பூங்காவுடன் கூடிய நூலகம் அமைக்கும் திட்டம்  விரைவில் செயல்படுத்தப்படும் என திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில் நூலகத்தை திறந்து வைத்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்து உள்ளார்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில்  நவீன வசதியுடன் கூடிய நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கா் ,   யல்நாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் உள்பட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில்  இதுபோன்ற நூலகம் அமைக்க அரசு திட்டமிட்டது.   அதன்படி, தமிழகத்தில் 100 இடங்களில் பூங்காவுடன் அமைந்த நூலகம் அமைக்க அரசால் திட்டமிடப்பட்டு, முதல் நூலகமாக திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 50 பேரும், நூலகப் பூங்காவிலும் 50 பேரும் அமா்ந்து புத்தகங்கள் படிக்கலாம். இந்த நூலகத்தை உருவாக்கித் தந்த குழுவுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற நூலகங்களால்,  போதுமக்கள்  மட்டுமின்றி அனைத்து தரப்பினரும்,  நூல்கள், நாளிதழ்களை வாசிக்க முடியும். இ தன் மூலம் வாசிப்புப் பழக்கம் உருவாகும் என்றார்.

தொடர்ந்து பேசியவர்,  சென்னையில் மட்டுமின்றி மாவட்ட வாரியாக அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழாவை நடத்தி வருகிறோம்.   ஒவ்வொரு பள்ளியிலும் நாள்தோறும் 20 நிமிஷம் மதிய வேளையில் நூலகத்திற்கு சென்று ஒரு புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்றவர், மாநிலத்தில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்றார்.