சென்னை மதுரவாயலில் பைக் டாக்ஸி ஓட்டிச் சென்ற பத்திரிகையாளர் சொகுசு கார் மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றுக்கு கேமராமேனாக பணிபுரியும் பிரதீப் குமார் (39) ஓட்டிச் சென்ற பைக் மீது பி.எம்.டபுள்யூ சொகுசு கார் மோதி உயிரிழந்தார்.
பத்திரிகையாளரான பிரதீப் குமார் பகுதி நேரத்தில் ராபிடோ பைக் டாக்ஸி ஓட்டி வந்துள்ளார்.
வேலப்பன்சாவடியில் உள்ள ஒரு நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்ட சொகுசு காரை முருகன் என்பவர் ஒட்டி வந்ததாகவும் விமான நிலையத்தில் பயணியை இறக்கி விட்டுவிட்டு திரும்பும்போது இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் தெரிகிறது.
ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அதன் சென்சாரும் செயலிழந்ததை அடுத்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.
பின்னர் காரில் இருந்து குதித்து தப்பிய ஓட்டுநர் முருகன் தலைமறைவானதை அடுத்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.